ராதா கிருஷ்ண திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ காமகோடி நகர் மற்றும் இணைப்பு வாழ் மக்கள் பக்த ஜன சபை (வளசரவாக்கம்) சார்பில் 35ம் ஆண்டு ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாண மஹோத்ஸவம் ஜூலை 4ந் தேதி முதல் 8ந் தேதி வரை வளசரவாக்த்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமகோடி நகர் தியான மண்டபத்தில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகள் விபரம்
ஜூலை 4ந் தேதி
மாலை 6.30 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைப்பவர் ஜேய்ஸ்ரீ பாலமுருகன் இதனை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் தலைப்பில் உபன்யாசம்.
ஜூலை 5ந் தேதி
மாலை 6.30 மணிக்கு திருமந்திரச் செல்வம் (10ம் திருமுறை, திருமூலர் திருமந்தரம்) தலைப்பில் உபன்யாசம்
ஜூலை 6ந் தேதி
மாலை 6.30 மணிக்கு முத்தமிழ் அரசி டாக்டர். சரஸ்வதி ராமநாதன் – கிருஷ்ண கானம்
ஜூலை 7ந் தேதி
காலை 7.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மற்றும் வேத பாராயணம் (கணேசன் மற்றும் சங்கரன் குழுவினர்) மற்றும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாராயணம் (ஸ்ரீ காமகோடி நகர் மகளிர் குழுவினர்)
காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நாம சங்கீர்த்தனம் ஆரம்பம் தோடய மங்களம், குருகீர்த்தனம், கீதகோவிந்த மஹா காபியம் (அஷ்டபதி ஆரம்பம்).
மாலை 3 மணி முதல் 6 மணி வரை அஷ்டபதி பஜனை
மாலை 6.30 மணிக்கு மாப்பிளை அழைப்பு
இரவு 8.30 மணிக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் மற்றும் டோலோத்ஸவம்
ஜூலை 8ந் தேதி
காலை 8.30 மணிக்கு சம்ப்ரதாய உஞ்சவ்ருத்தி
காலை 9.30 மணிக்கு ஸ்ரீ ராதா திருக்கல்யாண மஹோத்ஸவம், திருமாங்கல்ய தாரணம் மற்றும் ஆஞ்சநேய உற்சவம், மங்களம்
பகல் 1 மணிக்கு கல்யாண விருந்து
அனவைரும் வருக.

Comments